வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் பிரதமர் ட்ரூடோ

தேர்தலை குறிவைத்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.

குறிப்பாக நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ட்ரூடோ, இரண்டாவது நாளான நேற்று (வியாழக்கிழமை) தமது கட்சி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில், குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு சென்ற ட்ரூடோ, அங்கு குழந்தைகளின் நலனை முன்னிலைப்படுத்திய கொடுப்பனவுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதையடுத்து நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் லிபெரல் உறுப்பினர் சார்பில் கூட்டமொன்றில் நான்கு நிமிடங்கள் உரையாற்றினார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 2015 இல் வெற்றிபெற்ற லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர் அலைனா லொக்கார்ட் இன் வெற்றிக்காக ட்ரூடோ தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்