வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட Sussex இல் மீட்பு பணிகள் ஆரம்பம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட Sussex பகுதியில் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் Sussex பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக Sussex இன் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருந்ததுடன், 38 பேர் இடம்பெயர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் தற்போது வெள்ளநீர் வழிந்தோடி வருவதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளாாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், வெள்ளப்பெருக்கு காரணமாக Sussex இல் உள்ள சில வீதிகள் சிதைவடைந்துள்ளதாகவும், அவற்றை புனரமைப்பு செய்வற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்