கனடாவின் சில பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கை!

கனடாவின் சில முக்கிய பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கனடாவில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மேலும் பலர் பதுங்கி இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுதொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்