Carleton பல்கலைக்கழக கட்டடத்தில் பரவி தீ கட்டுப்பாட்டில்

கனடாவின் Carleton பல்கலைக்கழக கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Carleton பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் உள்ளுார் நேரப்படி நேற்று(சனிக்கிழமை) திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தீப்பரவல் காரணமாக Carleton பல்கலைக்கழக ஆய்வு கூடம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்