காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பினரின் தைப்பொங்கல் கொண்டாட்ட விழா…

காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பினர் முதன் முறையாக தைப்பொங்கல் கொண்டாட்ட விழாவை இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு கடற்கரையில் வெகு சிறப்பாக நடாத்தியருந்தனர்.

காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் விசிகரன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வு மங்கள விழக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

பின்னர் யானைக்கு கண் வைத்தல், தேங்காய் திருவுதல்,கயிறு இழுத்தல் போன்ற தமிழர்களின் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் இன்நிகழ்வின் போது 2018ம் ஆண்டு காரைதீவிலருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் காரைதீவு இராம கிருஷ்ண மிஷனில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான சீருடை துணி வழங்கி வைக்கின்ற நிகழ்வும் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கெளரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகதீசன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான நேசராஜா,காண்டீபன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக விளையாட்டு நிகழ்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கப்பட்டது.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும் 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்