பருத்தித்துறையில் உலரவைக்கப்பட்ட நிலையில் 68 கிலோ கஞ்சா மீட்பு

பாறுக் ஷிஹான்
யாழ். பருத்தித்துறை பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்து ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பருத்தித்துறை, இன்பசிட்டி கடற்கரைப் பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்தே 68 கிலோ கேரள கஞ்சா பொலிசாரால்  திங்கட்கிழமை(28) மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்படையினர் வழங்கிய தகவலிற்கமைவாக காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உடுகமசூரியவின் உத்தரவிற்கமைய பருத்தித்துறை பொலிஸார் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சாவை தோட்டக் காணியொன்றில் கஞ்சாவை உலர வைத்தவர்கள் யார் என்று அறியப்படாத நிலையில், தோட்டக் காணியின் உரிமையாளரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 5 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்