யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சனசமூக நிலை கட்டட நிர்மாணப்பணிகளை யாழ் மாநகர முதல்வர் பார்வையிட்டார்

வடக்குமாகாண சபை உறுப்பினராக யாழ் மாநகர முதல்வர் அவர்கள் இருந்த பொழுது மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பாசையூரில் சனசமூக நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முதல்வர்  முன்னெடுத்திருந்தார்.
குறித்த வேலைத்திட்டம் யாழ் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் கட்டட நிர்மானப்பணிகள் நிறைவுருகின்ற இச் சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக முதல்வர்  கள விஜயம் ஒன்றை நேற்று (28) மேற்கொண்டிருந்தார்.
இவ் நேரடி விஜயத்தின்  போது வடக்குமாகாண பிரதம செயலாளர் அவர்கள், யாழ் மாநகர சபை உறுப்பினர்களான  இ.செ. செல்வவடிவேல்,  ப. தர்சானந்த் மற்றும்  யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்