கனடா- தமிழக கூட்டுத்தயாரிப்பாக உருவாகியுள்ள ” நேத்ரா” திரைப்படம்

கனடா- தமிழக கூட்டுத்தயாரிப்பாக உருவாகியுள்ள ” நேத்ரா” திரைப்படம் பெப்ரவரி மாதம் 8ம் திகதி தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவரும் தமிழ் திரை உலகின் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவருமான திரு. வெங்கடேஷின் 23 வது படமாக உலகெங்கும் திரைக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் திகதி வெளிவர இருக்கிறது நேத்ரா தமிழ் படம். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் கடந்த
26ம் திகதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

மேற்படி விழாவில் கலந்து கொள்ளவென திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கனடாவில் வர்த்தக துறையில் வெற்றியாளராகத் திகழ்பவருமான திரு செல்வநாயம் பரராஜசிங்கம் (பரா) அவரது பாரியார் ஆகியோர் சென்னை சென்றிருந்தனர்.

விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளரும், கனடாவின் தொழிலதிபர்களில் ஒருவருமான திரு. பரராஜசிங்கம் ” சுமார் 70% படம் கனடாவிலும், அங்குள்ள ஈழத்திரைக் கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருப்பதாகவும், இது ஒரு திகில் நிறைந்த அதே நேரத்தில் குடும்பங்கள் விரும்பும் ஒரு படமாக உருவாகி இருப்பதாக கூறினார்”. படத்தின் முதல் ஒலிதட்டை தயாரிப்பாளர் பரராஜசிங்கம் வெளியிட இயக்குநர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குனர் திரு. வெங்கடேஷ் ” 20 படங்களைத் தாண்டி இயக்கி இருந்தாலும், முதல் முறையாக படத்தின் பெரும்பாலான பகுதிகளை வெளிநாட்டில் எடுத்தது மிகுந்த சவாலாகவும், அதே நேரத்தில் மனதிற்கு முழு திருப்தி தரும் விதமாகவும் படம் வெளிவந்திருப்பதாக கூறினார். இந்த படம் இயக்க முடிவெடுத்து அதனை தயாரிப்பாளரான திரு. பர ராஜசிங்கத்திடம் சொன்ன போது எவ்வித தயக்கமும் இன்றி கடைசிவரை தன்னுடன் இருந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

விழாவில் திரைபட இயக்குனர்கள் பாக்கியராஜ், ஆர்.கே செல்வமணி, பேரரசு, வசந்தபாலன், எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா-வெங்கட், நடிகர்கள் சரத்குமார், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர், நடிகைகள் நமீதா, பிக்பாஸ் ரித்விகா மற்றும் படத்தின் விநியோகஸ்தர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா நன்றியுரை வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்