சிங்கப்பூரில் நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக அர்ஜுன மகேந்திரன்!

சிங்கப்பூரில் தொடர்ந்தும் பல நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக செயற்பட்டு வருவதை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி ஊழல் தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தென்னாபிரிக்க பத்திரிகையொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில்  தான் தொடர்ந்தும் சிங்கப்பூரில் பல நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக செயற்பட்டு வருவதை உறுதி செய்துள்ள அவர், மத்திய கிழக்கு நாடுகளில் முதலீடு தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அர்ஜுன மகேந்திரன் இருக்கும் இடம் தெரியாது என இலங்கை பொலிஸார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்