பிரதேச அரசியல்வாதியின் அசிங்கமான செயற்பாடு ! கல்முனை மின்சாரசபை புதிய கட்டிட திறப்பு விழா இடைநிறுத்தம்..! ஊழியர்கள் விசனம்

கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலய திறப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை பிரதம மின் பொறியலாளர் பர்கான் தலைமையில் இடம்பெறவிருந்தது.

இக்கட்டிட திறப்புவிழா கல்முனை பிரதேச பிரபல அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அங்கு கடமைபுரியும் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது ;

கிழக்கு மாகாண பிரிவு 2 குரிய மேலதிக பொது முகாமையாளர் இந்த கல்முனை பிராந்திய புதிய கட்டிடத்தை இன்று திறந்துவைக்கவிருந்தர். எனினும் இந்த பிரதேச பிரபல அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் இன்று இடம்பெறவிருந்த இந்த கட்டிட திறப்பு விழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண மின்சாரசபை மேலதிக பொது முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதியால் கடந்த காலங்களில் எந்த ஒரு பங்களிப்பையும் எமது மின்சார சபைக்கு வழங்கவில்லை. இந்த இடத்தை பெறுவது முதல் கட்டிடம் நிர்மானிக்கப்படும் வரை எமது மின் பொறியலாளரே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த அரசியல்வாதியின் இந்த மோசமான செயற்பாடால் ஊழியர்கள் குறித்த அரசியல்வாதிக்கு எதிராக கடுமையான விசனத்தை தெரிவித்துவருவதாகவும் இவ்வாறான அசிங்கமான செயற்பாடுகளை குறித்த அரசியல்வாதி ஈடுபடுவதை நிறுத்திகொள்ளுமாறும் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இக்கட்டிடமானது பொதுமக்களுக்காக இலங்கை மின்சாரசபையின் நிதியில் இருந்து நிர்மானிக்கப்பட்டு திறந்துவிட படவிருந்தது.இந்நிலையில் இன்று தமது தேவைகளை பூர்த்திசெய்யும் வண்ணம் வருகைதந்த பொதுமக்கள் பெரும்சிரமத்தோடு குறித்த அரசியல்வாதிக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகங்களையும் தெரிவித்தவாறு வெளியேறி செல்வதாகவும் இந்த அரசியல்வாதியின் இந்த நாகரிகமற்ற செயலை ஊழியர்கள் ஆகிய நாங்கள் வன்மையாக கண்டிப்பதாக ஊழியர் ஒருவர் எமது ஊடக பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது கருத்துதெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்