முஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் அமைப்போம்: சரத் பொன்சேக்கா

யானை சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சி அமைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்புதிய தேசிய அரசாங்கத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பல உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் இந்த கூட்டரசாங்கம் அரசியலமைப்புக்கு உட்பட்டே அமைக்கப்படவுள்ளதாகவும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால் தேசிய அரசாங்கமானது  யானைச் சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அமையுமே ஒழிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்