சுதந்திரதின நிகழ்விலிருந்து புறக்கணிக்கப்பட்டாரா பொன்சேகா?

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்கபோவதில்லையென முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆங்கிழ நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி (திங்கட்கிழமை) இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்வில் பங்குகொள்ளுமாறு தமக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக்கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவது இருக்கின்றது. அவ்வாறான நிலையில், இந்தப் பதவிக்கு மரியாதை வழங்கப்படாவிட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்புக்கான, ஒத்திகை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விருந்தினர்களின் பட்டியலிலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்