கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி.

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு – கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் 2019ஆம்அண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 30.01.2018ஆம் நாள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.

பாடசாலையின் முதல்வர் செல்வி.வி.விக்னேஸ்வரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு, பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், மாணவர்களது அணி நடை என்பன இடம்பெற்றது. இந் நிகழ்வுகளையடுத்து மாணவர்களது இல்ல மெய்வல்லுநர் திறானாய்வுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், விருந்தினர்களது உரைகள், இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், கோறஸ் டிலான்(ஆசிரிய ஆலோசகர், உடற்கல்வி) றெனி பீஷ்மன் (கொக்கிளாய் பங்குத் தந்தை), இலங்கை வங்கி முள்ளியவளை முகாமையாளர் பா.ஜெயந்தன், கு.ஆரணன்(இலங்கை வங்கி உத்தியோகத்தர்), கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், ந.முகுந்தன் (மாவட்ட விளையாட்டு அதிகாரி முல்லைத்தீவு) ஆகியோர் கலந்துகொண்டதுடன், அயற்பாடசாலைகளின் அதிபர், ஆசிசிரியர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்