குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடி விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள வடிகாண்களின் மீது அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள், அத்துமீறிய கட்டடங்கள் என்பவற்றையும், வடிகாண்களின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும்  மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட்  நேரடி விஜயம் ஒன்றை கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது  அத்துமீறல் தொடர்பில் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மேல் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

மாநகர முதல்வரின் இந்த நேரடி விஜயத்தின் போது யாழ் மாநகர சபையின் பிரதம பொறியியலாளரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்