மன்னாரில் அரச மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு

அரச மருந்தாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மன்னார் மாவட்ட அரச வைத்தியசாலைகளிலுள்ள மருந்தாளர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்தக்கோரி, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் பிரதேச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பினால், இன்றைய தினம் வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள், மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து வந்த மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்