நிதி அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் சுங்க பணியாளர்களின் போராட்டம்!

சுங்க பணியாளர்களும் நிதி அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுங்க பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுங்க பணியாளர்களுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் இன்று  (வெள்ளிக்கிழமை)  நிதியமைச்சில் கலந்துரையடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்