ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் தேர்தலில் தனித்தே போட்டியிவோம் என குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியா அல்லது ராஜபக்ஷ தரப்பில் ஒருவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், சுதந்திரக் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரியின் பெயருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்