ஐ.எஸ். அமைப்புடன் இணைய முயன்ற கனேடியர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றில் சரண்!

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகளின் முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்டு சிரியாவுக்குச் சென்றதாக, கனேடியர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மிசிசாகாவைச் சேர்ந்த 29 வயதான பமீர் ஹக்கீம்ஸாதா எனப்படும் குறித்த நபரே இவ்வாறு, நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி பமீர் ஹக்கீம்ஸாதாவிற்க்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

பமீர் ஹக்கீம்ஸாதா நீதிமன்றத்தில் அளிக்க வாக்கு மூலத்தின் படி, அவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி, ரொறன்ரோவில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்காக சிரியா செல்ல முயன்றதாக நீதிமன்றில் கூறியுள்ளார்.

மேலும், இணையத் தளங்களில் வெளியாகிய ஐ.எஸ் அமைப்பு குறித்த பதிவுகளையும், காணொளிகளையும் கண்டு மனமாற்றத்திற்கு உள்ளாகியுதாகவும், சிரியாவுக்கு எப்படிச் செல்வது என்பதனை விபரிக்கும் இணையத் தளம் ஒன்றின் உதவியுடன் துருக்கிக்கு சென்றதாகவும், நான்கு நாட்கள் துருக்கியில் தங்கியிருந்தாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைய முயல்வதாக சந்தேகித்த வாடகை கார் சாரதி ஒருவர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் இதனையடுத்து அவரை கைது செய்த துருக்கி அதிகாரிகள், விசாரணைகளின் பின்னர், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி அவரை கனடாவுக்கு நாடுகடத்தியதாகவும், அவர் மீண்டும் துருக்கிக்குள் நுளைவதற்கு ஒரு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்