மெக்ஸிக்கோவில் கனேடியர் உயிரிழப்பு!

மெக்ஸிக்கோவில் கனேடியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய வெளியுறவுச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கனேடிய பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மெக்சிக்கோவில் உயிரிழந்தள்ளமை தொடர்பில் தாங்களும் அறிந்துள்ளதாக அச் செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படுவதாகவும் எனவும் கனேடிய வெளியுறவுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அந்த நபரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக, கனேய வெளியுறவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஸ்டெஃபானோ மரோன் தனது அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனிநபர் அந்தரங்கத் தகவல் பாதுகாப்பு காரணமாக, இது குறித்து இதனைவிட மேலதிக தகவல்களையோ கருத்துக்களையோ வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்