லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுத்த இலங்கை தூதரகம்….?

இன்று இலங்கையின் 71வது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பனிக் குளிரையும் பொருட்படுத்தாது வயது வேறுபாடின்றி இலங்கை சுதந்திர தினத்தை எதிர்த்து பலத்த பாதுகாப்போடு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட அவர்களை கையடக்கத் தொலைபேசி மூலம் மீண்டும் இலங்கைத் தூதரகத்திலுள்ளோர் படம்பிடித்துள்ளனர்.

கடந்த வருடம் இலங்கையின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகையில் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்திலும் மக்களை கையடக்கத் தொலைபேசி மூலம் படம் பிடித்துள்ளளார். இந் நபர் கடந்த வருடமும் பிரியந்த பெர்னான்டோவுக்கு அருகாமையில் நின்றவாறு படம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஏன் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை படம் பிடிக்கின்ரனர். யார் கூறி இவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்