இலங்கையின் 71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் ஆர்பாட்டம்

இலங்கையின் சுகந்திரதினமான இன்று (04/02/2019) பிரித்தானியாவில் 13,hydepark garden இல் அமைந்துள்ள இலங்கைதூதரகத்தின் முன்னால் புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது , இதில் இந்த சுகந்திரம் எமக்கானது அல்ல இது எமது கறுப்புதினமே என கூடியிருந்த தமிழர்கள் உரத்து சொன்னார்கள் ,இலங்கை அரசு தொடர்ந்து தமிழின அழிப்பை செய்துவருகிறது

எமது மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை எமக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை இராணுவ பௌத்தமயமாக்கல் தமிழர் பிரதேசங்களில் தொடர்கிறது இவ்வாறு இலங்கை அரசு தொடர்ச்சியாக திட்டமிட்ட இனப்படுகொலையை செய்து வருகின்றது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை மன்னார் மனிதபுதைகுழி குறித்து விசாரணை வேண்டும் போன்ற கோரிக்கை குரல்கள் போராட்டத்தில் ஒலித்தன மற்றும் கடும் குளிருக்கும் மத்தியிலும் புலிக்கொடி கறுப்பு கொடிகளோடு திரண்ட உணர்வாளர்கள் இலங்கை அரசின் அடக்குமுறைக்கெதிரான குரல் எழுப்பினர் மற்றும் கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற அமைதிப்போராட்டத்தின் போதோ இலங்கை அரசின் பிரகேடியர் பிரியங்கா பெர்ணாண்டோ போராட்டாக்கார்ர்களை நோக்கி உயிர் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக பிரித்தானியா நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்