தேசிய அரசாங்கம் குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

தேசிய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியும் முஸலிம் காங்கிரஸும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளமை முறையற்ற செயற்பாடென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது.

இதேபோன்று பிவித்துரு ஹெல உறும கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சி புதிய தேசிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால், மூன்று கட்சிகள் அவசியமென  குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு முரண்பாடுகளான கருத்துக்கள் காணப்படுகின்ற நிலையில் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தேசிய அரசாங்கம் தொடர்பாக இன்று கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்