மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையைச் சுற்றி சைக்கிள் ஓட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையைச் சுற்றி, துவிச்சக்கரவண்டியில் சாதனைப் பயணமொன்றை வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பிக்கவுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அவர் இப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி, வவுனியா கோயில்குளம் சிவன் ஆலயம் முன்பாக ஆரம்பிக்கவுள்ள இப்பயணத்தை மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழத்தில் 11 மணிக்கு நிறைவுறுத்த உத்தேசித்துள்ளதாகவும் தர்மலிங்கம் பிரதாபன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த.பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்தவராவார்.

குறித்த துவிச்சக்கர வண்டிப்பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்