பற்றாக்குறையாகக் காணப்படுகின்ற மருந்துவகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் 25 க்கும் மேற்பட்ட மருந்துவகைகளை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கான மருந்துக்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் லால் பனாப்பிட்டிய நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 4 மருந்துக்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மருந்து வகைகளையும் விரைவாக இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் லால் பனாப்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்