சிறுவர்களின் பாதுகாப்பினை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – யுனிசெப்

சிறுவர்களை வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை வகுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அதில் இணையத்தளத்தில் இருந்து சிறார்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்