புதிய டெஸ்ட் அணித் தரப்படுத்தல் வெளியீடு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் நிறைவடைந்தப் பின்னரான புதிய டெஸ்ட் அணித் தரப்படுத்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணி இரண்டு புள்ளிகளை இழந்து 89 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா மேலும் 3 புள்ளிகளை அதிகமாக பெற்று, 104 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் இருக்கிறது.

புதிய பட்டியலின் படி இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நியுசிலாந்து 107 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 8ம் இடத்திலும், பங்களாதேஸ் 9ம் இடத்திலும், சிம்பாப்வே 10ம் இடத்திலும் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் 11ம் மற்றும் 12ம் இடங்களில் உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்