கோணேஸ்வரர் ஆலயத்தில் சிங்களப் பெண் நடத்தும் அதிசயம்!!…. படையெடுக்கும் இந்து பக்தர்கள்!

இலங்கையில் தமிழ் மக்களுடைய காணிகளை மட்டும் சிங்களவர்கள் சொந்தம் கொண்டாடுவது கிடையாது, இந்துக் கடவுள்களையும் அவர்கள் தங்களது தெய்வமாகவே வழிபடுகின்றார்கள்.

காளி, அம்மன், விநாயகர், விஷ்ணு, போன்ற இந்துக் கடவுள்களை சிங்கள மக்கள் மிகவும் பக்திப்பூர்வமாக வழிபடுவதை தெற்கில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது.

வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இந்து ஆலயங்களில் இந்துக்களை விட சிங்களவர்களை அதிகம் காணலாம். அந்த அளவுக்கு தமிழ் கடவுள்களை சிங்களவர்கள் வழிபடுகின்றார்கள். இது தெற்கில் இருக்கும் தமிழர்களுக்கு புதிது அல்ல. ஆனால் வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் தமிழ் மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அவர்களுக்கு இவ்வாறான விடயங்கள் புதிதாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயமாகவும் இருக்கின்றது.

அந்த வகையில் திருகோணமலையில் கோணேஸ்வரர் அலயத்தில் சிங்களப் பெண் ஒருவர் அம்மனின் பக்தர்களுக்கு தினமும் வாக்கு கூறி வருவது வடக்கு மக்களிடையே பெரிதும் பேசப்படுகின்றது.

கோணேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பத்தினிதேவி அம்மன் முன்னிலையில் குறித்த பெண் பக்தர்களுக்கு வாக்கு கூறிவருகின்றார். குறித்த பெண் சிங்கள மொழியிலேயே வாக்கு கூறுகின்ற நிலையில், அதனை மொழிபெயர்ப்பு செய்து சிங்களம் தெரியாத தமிழ்மொழி பக்தர்களுக்கு கூறுவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளரையும் வைத்துள்ளார்.

இந்த விடயம் வடக்கிலிருந்து வருபவர்களுக்கு புதிதாக காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் திருகோணமலையில் மட்டும் அல்ல தெற்கில் பல ஆலயங்களில் நடைபெறுவதை காணக்கூடியதாகவிருக்கின்றது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்