எதிர்வரும் 15ம் திகதி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த தை மாதம் 17 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.

குறிஞ்சி,முல்லை,மருதம் ஆகிய இல்லங்கள் போட்டி போட்டுவரும் நிலையில் தற்போது மெய்வல்லுனர் போட்டிகளுடன் 118 நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில் இல்லங்களின் நிலையை கல்லூரி வெளியிட்டுள்ளது.

தொடர் சாதனைகளோடு குறிஞ்சி இல்லம் முதல் இடத்தில் 525 புள்ளிகளோடும் , இரண்டாம் இடத்தில் 424 புள்ளிகளுடன் மருதம் இல்லமும், 325 புள்ளிகளுடன் முல்லை இல்லமும் உள்ள நிலையில் இறுதி நாள் நிகழ்வுகளுக்கான ஆயத்தங்களை இல்லங்கள் மேற்கொண்டு வருகிறது.

இம் மாதம் 15ம் திகதி (15/02/2019) கல்லூரியின் கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்