கடும் குளிர் காலநிலை – 211ற்கான அழைப்புக்கள் அதிகரிப்பு!

எட்மண்டனில் கடும் குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாக 24/7 நெருக்கடி நிலை தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த எட்மன்டன் பிராந்தியத்தின் கனடிய மன நல சங்க செய்தித் தொடர்பாளர், ஒட்டுமொத்த அழைப்பு முன்னரை விட தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

அத்தோடு அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்குவதற்காக கூடுதல் ஊழியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

24/7 நெருக்கடி நிலை தொடர்பான குழு, அவசரகால நிலைமையில் உடல் ரீதியிலான மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சேவையை அணுக, 211-ஐ அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்