பணம் செலுத்தாமையாலேயே பாராளுமன்ற உறுப்பினரின் தொலைபேசி இணைப்பு நிறுத்தப்பட்டது

>
> வவுனியா நிருபர்
>
> வன்னி பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கையடக்க தொலைபேசி இணைப்பு இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு காரணம் பணம் செலுத்தப்படாமையே என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
>
> இரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்புகொள்வதற்கு பொதுமக்கள் உட்பட பலரும் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்திருந்தனர்.


> இந் நிலையில் நேற்று 7.2 வியாழக்கிழமை மாலையில் இருந்து தொலைபேசி இயங்கத்தொடங்கியிருந்தது
> இதன் பொது பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்ட ஊடகவியலாளர் உங்கள் தொலைபேசி இரண்டு நாட்களாக இயங்கவில்லையே என கேட்டபோது
> தொலைபேசிக்கு பணம் செலுத்தப்படவில்லை. அதற்குரிய பணம் இல்லாமையால் செலுத்த முடியாதிருந்தது தற்போதுதான் பணத்தை கடனாக பெற்று செலுத்தியிருந்தேன் என தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்