புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் உப அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு!!

>வவுனியா நிருபர்
> வவுனியா மாவட்ட செயலகத்தில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் உப அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இன்று (08) திறந்து வைக்கப்பட்டது.
>
> மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அயேல இத்தவல பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சுரங்க பணியகத்தின் உப அலுவலகத்தை திறந்து வைத்திருந்தார்.

>
> நிகழ்வில் அதிதிகள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மங்கள இசை முழங்க பவனியாக அழைத்து வரப்பட்டு அலுவலகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்கள் வீதிகள் மற்றும் கட்டிடங்களுக்கான மண் கற்களுக்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு அனுராதபுரத்திலுள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைமை காரியாலயத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் கால தாமதத்தை தவிர்க்கும் நோக்குடன் உப அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
>
> நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் க.உதயராசா மற்றும் மாவட்ட செயலகத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்