குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி.


விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் 2019ஆம்அண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 07.02.2018 நேற்றைய நாள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.

பாடசாலையின் முதல்வர் க.ஜெயவீரசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு, பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், மாணவர்களது அணி நடை என்பன இடம்பெற்றது. இந் நிகழ்வுகளையடுத்து மாணவர்களது இல்ல மெய்வல்லுனர் திறானாய்வுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், விருந்தினர்களது உரைகள், இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறீ புஸ்பநாதன் (கோட்டக்கல்வி அதிகாரி, கரைதுறைப்பற்று), பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், உப தபாலதிபர் இ.மயூரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர்களான இ.கவாஸ்கர், சி.லோகேஸ்வரன் அயற்பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்