கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்வு; கூட்டமைப்பு பிரதமருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை…

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்பார்ப்புடன் காணப்படுகின்ற கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பிரதமருடன் கலந்துரையாடி இருந்தனர்.

இதன் போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக காரசாரமான முறையில் பிரதமருக்கு கருத்து தெரிவித்தார்.

மேலும் இவ் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை உடனடியாக தரம் உயர்த்தாவிடின் அரசாங்கத்திற்கு வழங்கிவருகின்ற ஆதரவுகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டும் ; அதற்கு சகல தகுதிகளுடன் அந்த பிரதேச செயலகம் காணப்படுகின்றது என்று இரா.சம்பந்தனும் அழுத்தமாக வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் ஒன்று அல்லது இரண்டு வாரங்களிற்குள் இது குறித்து சாதகமாக முடிவை தருவதாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்