சுவாமி விபுலானந்தரின் மருமகள் இயற்கை எய்தினார்….

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் மருமகள் கோமதகவள்ளி இன்று (08 ) இறைபதமடைந்தார்.இறக்கும் போது இவருக்கு வயது 92.

விபுலானந்தருக்கு அமிர்தவள்ளி மற்றும் மரகதவள்ளி என இரு சகோதரிகள்; மரகதவள்ளியின் கருவில் உதித்தவரே செல்லத்துரை கோமதகவள்ளி .

விபுலானந்த சுவாமிகள் இவருக்கு சூட்டிய செல்லப்பெயர் கண்ணம்மா.

சுவாமி விபுலானந்தரை பற்றி இணையத்தளங்கள் மற்றும் நூல்களில் காண முடியாத தகவல்களை (விபுலானந்தர் எழுதிய கடிதங்கள்) இவரிடத்தில் உண்டு.

இவரது உடல் காரைதீவில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை சனிக்கிழமை இடம்பெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்