யாழில் கத்தி முனையில் 17 பவுண் நகைகள் கொள்ளை!

யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.

தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றிலையே நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில் அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்ட கொள்ளை கும்பல், பெண்ணை தாக்கிவிட்டு தாலிக்கொடி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

இதனை அடுத்து காயமடைந்த பெண்ணின் கணவனால் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்டு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்