வடக்கிற்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகளைக்கொண்டே தெற்கு அபிவிருத்தி செய்யப்பட்டது – விஜயகலா

வடக்கிற்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகளைக்கொண்டே தெற்கு அபிவிருத்தி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கல்முனையில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

இதற்கு வடக்கு கிழக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் உதவி செய்ததாகவும்,  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்கு 700 தொண்டராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்