மாகந்துர மதூஷின் உதவியாளர் கைது!

மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியோரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கிரான்பாஸ் பகுதியில் வைத்து என்ரூவத்த சாமர என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஒருதொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, அவர்களின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மைக்காலமாகவே ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்