இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புல்மோட்டை கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தினைச் சேர்ந்த சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாபு, நிலவரசன், வீரசெல்வன், பிருதிவிராஜன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து மீனவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்