காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயல் குழு மாநாடு

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயல் குழு மாநாடு நடைபெறவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

இந்த நிகழ்வின் போது, சுயாதீனமாக இயங்கும் மனித உரிமை வல்லுனர்களை கொண்ட ஐந்து பேரை கொண்ட குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்