சுவாமி விபுலானந்தர் மகா நாட்டினை முன்னிட்டு இந்து சமய கலாசார பணிப்பாளர் விபுலானந்தர் அவதரித்த இல்லத்திற்கு விஜயம்…

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மகா நாட்டினை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர்  மற்றும் அவரது நினைவாலயம் என்பன இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மானம்  இடம் பெற்றுவருகின்றது.
அந்த வகையில் மாநாடு தொடர்பான விடயங்களை ஆராய்வது தொடர்பாகவும் கட்டடத்தினை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம். உமாமகேஸ்வரன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் இ.கர்ஜின் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ஏஸ். ஜெயராஜன்,அம்பாறைமாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் மேலும் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற உறுப்பினர்கள் அத்துடன் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சிறுமியர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்