பொலிஸ் அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க. உறுப்பினர் மீது குற்றச்சாட்டு!

பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை பொலிஸ் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்