எரிபொருள் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவுள்ளது.

இதன்படி எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த ஜனவரி 10ஆம் திகதி விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று விலை அதிகரிக்கப்படுமா? குறையுமா? என்பது தொடர்பாக அறிவித்த பின்னரே தெரியவரும்.

எவ்வாறாயினும் உலக சந்தையில் எரிபொருள் விலை பெரலொன்று 59அமெரிக்க டொலரில் இருந்து 62.10 டொலர் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்