மாவையின் முயற்சியால் தெல்லிப்பழையில் வீதி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் ஊடாகக் கம்பெரலியா நிதி மூலம் சித்தியம்புளியடி பேர்த்தி அம்பாள் வீதி புதிதாக அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை கிழக்கு, வட்டாரம் 17 இன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர் அனுசனின் கோரிக்கைக்கு அமைவாக வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா கம்பெரலியா திட்டத்தின் ஊடாக இந்த வீதி அமைப்புக்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.

20 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீதி  299 M நீளமானது என்பதுடன் பிரதேச மக்கள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தவிசாளர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்