இரண்டு அம்ச கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி சாதனை பயணம்.

>
> லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வளாகத்திலிருந்து தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இன்று (10.02) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
>
> இலங்கையை சுற்றி 32 நாட்களில் 2125 கிலோமீற்றர் பயணிக்கவுள்ள பிராதபனின் பயணத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
>
> இலங்கையின் 25 மாவட்டங்களுக்கு மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்  பயணித்த பிராதாபனை பாராளுமன்ற உறுப்பினர், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
>
> நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், எஸ்.காண்டீபன், மக்கள் சேவை மாமணி சேனாதிராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் நிறுவனர் கெ.சந்திரகுமார் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
>
> வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்