வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சி உதயம்

> வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சியின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (10.02) வவுனியா பண்டாரிக்குளத்தில் இடம்பெற்றது.
>
> வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமாக இயங்கிவந்த நிலையிலேயே இன்று அகதேசிய முற்போக்கு கழகம் எனும் கட்சியாக அங்குரார்ப்பனம் செய்யப்பட்டுள்ளது.
> இதன் போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்,  வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், கட்சியின் தற்போதைய தலைவருமான எம்.பி.நடராஜாவினால் கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.
>
> அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலின் போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது மீன் சின்னத்தில் போட்டியிட்டு இரு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
> இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்