வவுனியாவில்  சிறுவனின் மரணத்திற்கான மருத்துவ அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகத்தில்

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றுமுந்தினம் மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் நேற்று காலை கிணற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியிருந்ததுடன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து இன்று மருத்துவ அறிக்கை வெளிவந்ததானது உறவினர்களை மேலும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்றுமுந்தினம் மாலை சுந்தரபுரத்திலிருந்து  சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு  தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக  சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் அப்பம்மாவுடன்
சென்றிருந்தார். அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை கிணற்றில் இருந்து  குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்றும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள், அயலவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மருத்துவ பரிசோதனை இடம்பெற்றிருந்தது.
எனினும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன அப்புகாமி பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கி மூச்சுதிணறியே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்