இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்: ஜெனிவாவில் அமெரிக்காவுக்குப் பதிலாக  களத்தில் குதிக்கின்றன கனடா – ஜேர்மன்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற தீர்மானத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல கனடா மற்றும் ஜேர்மன் முன்வந்துள்ளது.
இந்தத் தகவலை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் இரகசியமான முறையில் பிரிட்டன் தெரிவித்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, திட்டமிடப்பட்டுள்ள அரசமைப்பு திருத்தச்சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் யோசனை ஒன்று எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் பல இரகசிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர் என்று குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்