வன பரிபாலன திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்…

காந்தன்.

தேசிய மரநடுகை நிகழ்சித்திட்டத்தினை முன்னிட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வன பரிபாலன திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ” வன ரோபா “2018
தேசிய மட்டத்தில் மற்றும் கிழக்கு மாகாணமட்டத்தில்  நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தின்
திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை ) அக்கரைப்பற்று பாடசாலை மாணவி  ஜெகநாதன் ஜதுர்ஷணா தரம் 12-13 பிரிவில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும், கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினையும், கே.வைசாலி தரம் 10-11 பிரிவில் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று விஷேட திறமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.சோமபால தலைமையில் 11/02/2019 இன்று காலை 11.30
மணியளவில் இடம்பெற்றது.
இவர்களுக்கான சான்றிதழ் அக்கரைப்பற்று வன பரிபாலன திணைக்களத்தின் உத்தியோகத்தரினால் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களினால் சான்றிதழ் மற்றும் அவர்களுக்கான காசோலையும் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்