கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் 2ம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் இரண்டாங்கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவு, அவசர நோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் நவீன வசதிகளுடன் கூடியதாக ஆரம்பிப்பதற்கான இரண்டாங்கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இன்றைய தினம் மலை 3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் சி.குமாரவேல், பிராந்திய சுகாதார கணக்காளர் தர்மசீலன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் வைத்தியசாலையின் இரண்டாங்கட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்துப் பகுதிகளையும் நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த முறையில் மாற்றியமைத்து மக்களுக்கான மருத்துவப் பணிகள் அனைத்தையும் இவ்வைத்தியசாலையிலேயே முன்னெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்