இலங்கை அணி குறித்து வாய்த்திறந்த ஹதுருசிங்க!

எதிர்ப்பார்க்காத சில விடயங்கள் காரணமாக இலங்கை அணி கடந்த காலத்தில் பின்னடைவை சந்தித்தாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணியுடன் நாளை ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் தொடருக்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான பொறுப்பை தான் உள்ளிட்ட அணியினர் ஏற்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்ச திறமையை வௌிப்படுத்த தவறிய காரணத்தால் பல வாய்ப்புக்களை தவறவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்